தயிர் பாக்கெட்டில் இந்தி திணிப்பு; தொட்டிலை ஆட்டும் முன் தொலைந்துவிடுவீர்கள்- முதலமைச்சர் எச்சரிக்கை!

ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தியில் தாஹி என எழுத வேண்டும் என்று கூறும் விவகாரத்தில், குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம்! தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள் என்று முதலமைச்சர்…

ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தியில் தாஹி என எழுத வேண்டும் என்று கூறும் விவகாரத்தில், குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம்! தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

இந்தி திணிப்புக்கு தமிழ்நாட்டில் எப்போதும் எதிர்ப்பு உண்டு. இந்நிலையில், ஆவின் நிறுவனம் விற்பனை செய்யும் தயிர் பாக்கெட்டுகளின் மீது தயிர் என எழுதக் கூடாது என்றும், தாஹி என்ற இந்தியில் எழுத வேண்டும் என்றும், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. இதற்கு கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

https://twitter.com/mkstalin/status/1641057640141967360

இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், எங்கள் தாய்மொழியைத் தள்ளி வைக்கச் சொல்லும் உணவு பாதுகாப்பு ஆணையம், தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்! மக்களின் உணர்வுகளை மதியுங்கள்! இந்தியை திணிக்க வேண்டாம். குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம்! தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்! என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.