கர்நாடக கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளுக்கு கல்லூரிகளில் அனுமதி மறுக்கப்படுவதற்கு எதிராக ஹிஜாப் அணிவது எங்கள் உரிமை என்பதை வலியுறுத்தும் வகையில் HIJAB IS OUR RIGHT என்ற ஹேஷ்டேக் மூலம் பல்வேறு தரப்பினர் ட்விட்டரில் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், ஹிஜாபை தடை செய்த கல்லூரி வளாகத்திற்கு எதிரே மாணவிகள் போராட்டத்தில் இறங்கினர். அவர்களுக்கு ஆதரவாக மாணவர்களும் களத்தில் நின்றனர். பிரிவினையை உருவாக்கும் சுவர்கள் இடிந்து விழட்டும் என அவர்கள் முழக்கமிட்டனர்.
கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டத்தில் எம்.எல்.ஏ கனீஸ் பாத்திமா தலைமையில் ஹிஜாப் தடையால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிராக இந்து மதத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தாங்களும், ஹிஜாப் அணிந்து வருவோம் எனக்கூறி காவி நிற சால்வை அணிந்து ஊர்வலமாக பள்ளிக்கு வந்தனர்.
இந்நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி ஹிஜாப் விவகாரம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், மாணவர்களின் கல்விக்கு ஹிஜாப் இடையூறாக வர வேண்டாம் என்றும், ஹிஜாப் விவகாரத்தால், இந்திய மகள்களின் எதிர்காலத்தை நாம் சூறையாடுகிறோம் என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஓமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோரும் இந்த விவகாரத்தைக் கண்டித்து கருத்து தெரிவித்திருந்தனர்.
அரசு வளாகத்திற்குள் மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக சீருடை முறையைப் பின்பற்ற வேண்டும் என கர்நாடக அமைச்சர் சுனில் குமார் தெரிவித்துள்ளார். ஹிஜாப் அணிய நினைக்கும் மாணவிகள் மதரசாவில் சென்று படிக்க வேண்டும் என்றும், ஷரியத் சட்டத்தை பின்பற்ற நினைக்கும் மாணவிகள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என்றும் மைசூர் எம்.பி., பிரதாப் சிம்ஹா சர்ச்சைக்குரிய முறையில் கருத்து தெரிவித்துள்ளார்.
ಎಲ್ರೂ ಕಾಲೇಜಿಗೆ ಜಾಬ್ ಗಾಗಿ ಬರ್ತಾರೆ, ನೀವು ಹಿಜಾಬ್ ಗಾಗಿ ಬರ್ತಿನಿ ಅಂದರೆ !
ನೀವು ಹಿಜಾಬ್ ಹಾಕಿಕೊಂಡಾದರು ಹೋಗಿ, ಬುರ್ಖಾ ಹಾಕಿಕೊಂಡಾದರು ಹೋಗಿ ಅಥವಾ ಪರದೆ ಅಕಾರದ ಟೋಪಿ ಬೇಕಾದರೂ ಹಾಕಿಕೊಂಡಾದರು ಹೋಗಿ ಅಥವಾ ಮೊಣಕಾಲು ಕಾಣುವಂತಹ ಜುಬ್ಬ ಪೈಜಾಬ ಹಾಕಿಕೊಂಡಾದರು ಹೋಗಿ.
ನೀವು ಹೋಗಬೇಕಾದ ಸ್ಥಳ ಶಾಲಾ ಕಾಲೇಜಲ್ಲ , ಮದರಸಾ ! pic.twitter.com/3Ee1TlTCNi— Prathap Simha (@mepratap) February 5, 2022
மேலும் இது தொடர்பாக உயர் நீதிமன்றம் விசாரிக்கும் வரை வாரத்தில் மூன்று நாட்கள் கட்டாயம் சீருடை அணிய வேண்டும் என அம்மாநில அரசு ஆணை வெளியிட்டுள்ளது.








