ஹிஜாப் அணியாததால் 21 வயது பெண்ணை கொன்ற தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் ஹிஜாப் அணியாததால், 21 வயது பெண்ணை காரில் இருந்து இறக்கி தலிபான்கள் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் திரும்ப சென்றதை அடுத்து அங்கு தலிபான்களுக்கும்…

ஆப்கானிஸ்தானில் ஹிஜாப் அணியாததால், 21 வயது பெண்ணை காரில் இருந்து இறக்கி தலிபான்கள் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் திரும்ப சென்றதை அடுத்து அங்கு தலிபான்களுக்கும் அரசு படைகளுக்கும் கடும் மோதல் நடந்து வருகிறது. ஆப்கானின் பல்வேறு மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். பல்வேறு பகுதிகளில் கடும் சண்டை நடந்து வருகிறது.

சில நாட்களுக்கு முன், இந்தியப் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கை தலிபான்கள் கொன்றனர். பின்னர் பிரபல நகைச்சுவை நடிகர் நசார் முகமத்தையும் அவர்கள் கொன்றார் கள். இந்தச் சம்பவங்கள் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், 21 இளம்பெண் ஒருவரை கொன்றிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் பால்க் மாவட்டத்திற்கு நஜானின் (Nazaneen) என்ற 21 வயது பெண் காரில் சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த தலிபான்கள், ஹிஜாப் அணியாததற் காக கடத்திச் சென்றனர். பின்னர் கொன்றுள்ளனர். தலிபான்களின் விதிபடி, பெண்கள் கல்வி கற்பதும் ஹிஜாப் அணியாமல் இருப்பது குற்றம். அதனாலேயே அந்தப் பெண்ணை அவர்கள் கொன்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், தலிபான்கள் இதை மறுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.