கடந்த பத்தாண்டுகளில் நடந்த தமிழ்நாடு சட்டமன்ற சிறப்பு கூட்டத்தின் விவரங்கள்

கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாடு சட்டமன்ற சிறப்பு கூட்டம் எந்தெந்த காரணங்களுக்காக கூடியது என்பதன் விவரங்கள்… நீட் விலக்கு தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இதையடுத்து அடுத்த கட்ட…

கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாடு சட்டமன்ற சிறப்பு கூட்டம் எந்தெந்த காரணங்களுக்காக கூடியது என்பதன் விவரங்கள்…

நீட் விலக்கு தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இதில் இறுதியாக, வரும் 8ஆம் தேதி சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடப்பெறும் என அறிவிக்கப்பட்டது. மேலும், நீட் விலக்கு மசோதாவை ஆளுநருக்கு மீண்டும் அனுப்ப அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் செய்யப்பட்டது. இதேபோல், கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாடு சட்டமன்ற சிறப்பு கூட்டம் எந்தெந்த காரணங்களுக்காக கூடியது என்பதை தற்போது பார்க்கலாம்.

  • கடந்த 2012 ஆம் ஆண்டு முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக தமிழ்நாடு அரசின் உரிமையை நிலை நிறுத்தும் வகையில் தமிழ்நாடு சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • 2013ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற காமென்வெல்த் போட்டிகளில் பங்கேற்காமல் புறக்கணிக்க வேண்டும் என சட்டமன்ற சிறப்பு கூட்டம் கூடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • 2017ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு விளையாட்டை தடையின்றி நடத்துவதற்கான நிரந்தர சட்டம், சட்டசபை சிறப்பு கூட்டத்தில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
  • 2018ஆம் ஆண்டு, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டதை தடுக்க சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.