ஈரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் 1 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் வெப்பம் தணிந்து மகிழ்ச்சி அடைந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் சாலை, பேருந்து நிலையம் சாலை, பெரியார் நகர், சம்பத் நகர், மூலப்பாளையம், வில்லரசம்பட்டி, சித்தோடு போன்ற பல்வேறு பகுதியில் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும் மாலை நேரத்தில் மழை பெய்தது.
இதனால் வெப்பம் தணிந்து குளர்ச்சி நிலவியது. மாவட்டம் முழுவதும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதனால் மழைநீர் வெள்ளம் பெருக்கத்தெடுத்து ஓடி சாலைகளில் தேங்கி வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் வெயிலின் தாக்கம் குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அனகா காளமேகன்






