ஈரோடு மாவட்டம் பண்ணாரி சோதனைச் சாவடியில் வாகன தணிக்கைக்காக நின்றிருந்த வாகனத்தில் இருந்து காட்டுயானை ஒன்று காய்கறிகளை எடுத்து தின்றது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஏராளமான காட்டுவிலங்குகள் வசித்து வருகின்றன.புலிகள் காப்பகமாக செயல்பட்டு வரும் இப்பகுதியில் புலிகள், காட்டு யானைகள்,கரடிகள் உள்ளிட்ட பல அரிய வன விலங்குகள் வசித்து வருகின்றன.
இவ்விலங்குகள் அவ்வப்போது இரைத்தேடி ஊருக்குள் வருவது தொடர்கதையாக உள்ளது. மேலும் இங்குள்ள பண்ணாரி வனப்பகுதியில் வனத்துறையின் சார்பில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் தணிக்கைக்காக நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றிலிருந்து காட்டுயானை ஒன்று சொகுசாக காய்கறிகளை எடுத்து தின்றுகொண்டிருந்தது.இதனை கண்டு அச்சமடைந்த வாகன ஓட்டுநர் மெதுவாக அங்கிருந்து வாகனத்தை இயக்கி சென்றார்.இதனால் சில மணி நேரம் சோதனைச் சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சமீப காலமாகவே மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில் காட்டுயானைகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
வேந்தன்