தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து நாசமாயின. இதனால் பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த செய்துங்கநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கருங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 100ஏக்கர் பரப்பளவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
இந்நிலையில் திருநெல்வேலி-திருச்செந்தூர் மெயின் ரோட்டிலுள்ள கருங்குளம் ஊரிலுள்ள விவசாய தோட்டம் ஒன்றில் இன்று காலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் உடனடியாக செய்துங்கநல்லூர் காவல் நிலையத்திற்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர்.சம்பவ இடத்திற்கு சில நொடிகளில் காவல் துறையினர் வந்துவிட்டனர்.
ஆனால் தீயணப்புத் துறையினர் சாத்தான்குளம் பகுதியில் ஏற்பட்டுள்ள தீயை அணைத்துவிட்டு வருவதாக கூறிவிட்டனர்.இதனால் பொதுமக்கள் உதவியுடன் காவல் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியிக் ஈடுபட்டனர்.ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் உருவானது.
இத் தீ விபத்தில் சுமார் பத்தாயிரம் வழை மரங்கள் எரிந்திருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த இரு மாதங்களில் மட்டும் பத்திற்கும் மேற்பட்ட வெவ்வேறு இடங்களில் வாழைத்தோட்டம்,பனை மரங்கள் தீயில் எரிந்துள்ளது குறிப்பிதக்கதாகும்.
வேந்தன்







