தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ராமநாதபுரம், சிவகங்கை, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நேற்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து வரும் கனமழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள், அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மோதிரமலை – குற்றியார் தரைப்பாலம் மூழ்கியது.
இதையும் படியுங்கள் : 25 ஆண்டுகள் ஆனாலும் மகளிர் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியாது – திமுக எம்பி கனிமொழி
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை தொடர்ந்து வரும் நிலையில், அம்மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் அறிவித்துள்ளார். காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்க இருந்த நிலையில், மழை காரணமாக கூடுதலாக ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.







