தீவுத்திடலில் ராட்டினத்தில் சிக்கிய தொழிலாளி : பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை தீவுத்திடலில் பழுது பார்க்கும் போது எதிர்பாராத விதமாக ராட்டினம் இயக்கப்பட்டதால் இளைஞர் பலத்த காயம் அடைந்தார். சென்னை தீவுத்திடலில் ஆண்டுதோறும் பண்டிகை, பள்ளி விடுமுறை காலங்களில் பொருட்காட்சி நடைபெறுவது வழக்கம் . இந்நிலையில்…

சென்னை தீவுத்திடலில் பழுது பார்க்கும் போது எதிர்பாராத விதமாக ராட்டினம் இயக்கப்பட்டதால் இளைஞர் பலத்த காயம் அடைந்தார்.

சென்னை தீவுத்திடலில் ஆண்டுதோறும் பண்டிகை, பள்ளி விடுமுறை காலங்களில் பொருட்காட்சி நடைபெறுவது வழக்கம் . இந்நிலையில் பள்ளி காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், தனியார் சார்பில் பொருட்காட்சி மற்றும் மீன்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

அங்கு உள்ள ராட்டினத்தில் பொதுமக்கள் நேற்று மாலை ஏறி பயணித்தனர். அப்போது ராட்டினம் சுற்றாமல் திடீரென பழுதாகி நின்றது. ராட்டினத்தை பழுது பார்க்கும் பணியில் நேபாளத்தை சேர்ந்த 35 வயதான ராம்குமார் ஈடுபட்டார். ராட்டினத்தில் இடையில் இணைப்பு சக்கரத்தை நிறுத்தாமல் அதில் ஏறி நின்று ராம்குமார் பழுது பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது.

அப்போது திடீரென ராட்டினம் சுற்ற ஆரம்பித்தால் சக்கரத்தில் இடையே ராம்குமார் சிக்கினார். இதை பார்த்து பொதுமக்கள் கூச்சலிட்டனர். அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் , தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ராம்குமாரை காப்பாற்றி, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.