விவசாயியை காலால் எட்டி உதைத்த விவகாரத்தில் தலைமறைவாகியுள்ள ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியனை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பிள்ளையார்குளம் ஊராட்சி கங்காகுளததில் கிராம சபை கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, அம்மையப்பர் என்ற விவசாயி, ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியனை, மாவட்ட ஆட்சியர் மாற்றி 4 மாதம் ஆகிவிட்டதாகவும், அவர் ஏன் இங்கு வந்துள்ளார் என்று கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ஊராட்சி செயலர் தங்கப் பாண்டியன், அம்மையப்பரைக் காலால் எட்டி உதைத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படியுங்கள் : தொடரும் கனமழை – கன்னியாகுமரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!
தங்கப் பாண்டியன் காலால் எட்டி உதைத்ததில் காயமடைந்த அம்மையப்பர், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், தலைமறைவாகியுள்ள அவரை 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.