தடுப்பூசி தட்டுப்பாடு நிலவரம் மற்றும் மாநில முதல்வர்கள் மற்றும் தலைவர்களின் கடிதங்கள், அறிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக, தன் ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள அவர் கூறியிருப்பதாவது: கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசின் தொகுப்பில் இருந்து 11.46 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. இது ஜூலை மாதத்தில் 13.50 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தடுப்பூசிகள் வழங்கப்படுவது குறித்து மாநிலங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மத்திய அரசிடமிருந்து எந்தெந்த மாநிலங்கள் எவ்வளவு தடுப்பூசி களை ஒவ்வொரு மாதத்திற்கும் பெற இருக்கின்றன என்பது முன்கூட்டியே தெரியவரும்.
தவறான நிர்வாகம் காரணமாகத்தான் பல இடங்களில் தடுப்பூசி செலுத்துவதற்கு பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். ஒவ்வொரு மாநில அரசும் மாவட்ட அளவில் தடுப்பூசி செலுத்த திட்டங்களை முழுமையாக வகுக்க வேண்டும்.
ஊடகங்கள் மூலம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வெளியிடும் அறிக்கைகள் பொதுமக் களிடையே குழப்பத்தையும் பீதியையும் ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.