திடீர் வெள்ளப்பெருக்கு: 9 பேர் உயிரிழப்பு

இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளதில் சிக்கி 9 பேர் உயிரிழந்த நிலையில் 8 பேர் மாயமாகி உள்ளனர். இமாச்சலப் பிரதேசம் குலுவில் கடந்த வெள்ளிக்கிழமை, மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, 25 பிரதான சாலைகள்…

இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளதில் சிக்கி 9 பேர் உயிரிழந்த நிலையில் 8 பேர் மாயமாகி உள்ளனர்.

இமாச்சலப் பிரதேசம் குலுவில் கடந்த வெள்ளிக்கிழமை, மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, 25 பிரதான சாலைகள் மூடப்பட்டன. இந்நிலையில், திங்கட்கிழமை அன்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 2 நாட்களில் 9 பேர் உயிரிழந்த நிலையில், 8 பேரை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதில் பிரபல பஞ்சாபி பாடகர் மன்மீத் சிங் உயிரிழந்துள்ளார். தனது நண்பர்களுடன் தர்மசாலாவுக்கு சென்ற மன்மீத் சிங், கரேரி ஆற்றில் வழுக்கி விழுந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாநிலம் முழுவதும் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, மாநிலத்தின் சூழ்நிலையை தொடர்ந்து கண்காணித்து தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும், என மத்திய உள்துறை அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளை, ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்ட இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர், போ பகுதி தான் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.