திருவள்ளூர் அருகே கோயில் குளத்தில் மூழ்கி 3 சிறுமிகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் புது கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த 3 சிறுமிகள் உள்ளிட்ட 5 பேர் அங்குள்ள கோயில் குளத்துக்கு துணி துவைக்க சென்றுள்ளனர். சிறுமிகள் மூவரும் குளித்துக் கொண்டிருந்த போது, நர்மதா என்ற சிறுமி நீரில் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்றுவதற்காக நீரில் இறங்கிய அனைவரும் அடுத்தடுத்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

கரையில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் 5 பேரின் உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். 3 சிறுமிகள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement: