அதிமுக ஆட்சியில் எல்லாம் ஊழல் மயம் -அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்

அதிமுக ஆட்சியில் எல்லாம் ஊழல் மயம் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்தார். அதிமுக ஆட்சியில் இருந்த போது நெடுஞ்சாலை துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி, டெண்டர் முறைகேடுகளை செய்ததாக புகார்…

அதிமுக ஆட்சியில் எல்லாம் ஊழல் மயம் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்தார்.

அதிமுக ஆட்சியில் இருந்த போது நெடுஞ்சாலை துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி, டெண்டர் முறைகேடுகளை செய்ததாக புகார் எழுந்தது.சிஏஜி எனும் தலைமை கணக்கு தணிக்கை அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தி உள்ள தகவல்கள் தொடர்பாக, அண்ணா அறிவாலயத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

குட்க்கா பான் மசாலா போன்ற புகையிலை பொருட்கள் விற்கக் கூடாது, என்பதற்காகத் தமிழ்நாடு முழுவதிலும் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வந்தது.அதை எதிர்த்து புகையிலை வியாபாரிகள் தொடர்ந்த வழக்கில் புகையிலைக்கு தடையில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தமிழ்நாட்டில் குட்கா பான் மசாலா விற்கப்படுவது தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் புகையிலை பொருட்கள் ஆனது நிறுத்தி வைக்கப்பட்டது.

2016முதல் 2021 அதிமுக ஆட்சியில் முறைகேடுகள் தலைவிரித்து ஆடியது என்பது சிஏஜி அறிக்கையில் தெரிய வந்துள்ளது. அதில் குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி வைத்திருந்த துறைகளில் அதிக ஊழல் நடந்துள்ளது. டெண்டர் விடுவதற்கான விதிகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் கணினி பயன்படுத்தும் தெரியவந்துள்ளது. அரசு இயந்திரம் தவறான பயன்படுத்தப்பட்டுள்ளது.

அரசு அதிகாரிகளின் 57 கணினிகளைப் பயன்படுத்தி 87 டெண்கர்களை ஒப்பந்ததாரர்கள் தாக்குதல் செய்துள்ளது. ஒரே ஐபியில் இருந்து 490 டெண்டர்கள் தாக்குதல் செய்யப்பட்டு ஏற்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவருக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வேண்டியவர்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் 3354 வீடுகள் முறைகேடாக அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் சட்டம் ஒழுங்கை காட்க தவறிவிட்டது அதிமுக. அதிமுக ஆட்சி காலத்தில் அரசு பணிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்துள்ளது.

எடப்பாடிக்கு வேண்டப்பட்ட நபரான செய்யாதுரை என்பவர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் பல கோடி பணம் மற்றும் நகை பறிமுதல் செய்யப்பட்டது‌. கலக்ஷன் கமிஷன் கரப்ஷன் என்று எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி இருந்துள்ளது. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளது. 5.9 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் அந்த வீடுகள் அனைத்து கட்டவில்லை.

இந்த திட்டத்துக்கு ஒன்றிய அரசு ஒதுக்கிய ரூ.1515 கோடியைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அடையாளம் காண்பதில் முறைகேடு நடந்துள்ளது. சிஏஜி அறிக்கையில் அதிமுக ஆட்சியில் முறைகேடு மற்றும் நிர்வாகத் திறமையின்மையைக் காட்டுகிறது.

அதிமுக ஆட்சியில் 3,554 வீடுகள் முறைகேடாகத் தகுதியற்ற நபர்களுக்கு வழங்கப்பட்டது. காவல் துறைக்கு ரூ.14.37 வீண் செலவு. அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு இருந்தது. 60 சதவீதம் மத்திய அரசு நிதி 40 சதவீதம் மாநில அரசு நிதியில் காவல்துறை நவீனப்படுத்தும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது.

சிசிடிவி கேமரா பொருத்தும் பணி, காவல் கட்டுப்பாடு அறைகள் நவீனப்படுத்த
83.46 கோடி செலவு செய்யப்பட்டது. ஆனால் அதில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுச் சரியா பயன்படுத்தப்படாமல் வீணானது. அதில் ரூ.14.38 கோடி வீண் செலவு.

அதிமுகவின் நிர்வாக திறமையின்மையால் வருவாய் பற்றாக்குறை 62000 கோடி உயர்ந்தது. குறிப்பாக மின் துறையில் பெரும் முறைகேடு நடந்துள்ளது. 68.58 கோடி ரூபாய் பள்ளி மாணவருக்கு லேப்டாப் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளது.

மேல்நிலைப் பள்ளி கல்வியில் அதிமுக ஆட்சியில் தனியார், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3.87 சதவீதம் சேர்க்கை அதிகரித்தது. அரசு பள்ளிகளில்
1.84 சதவீதம் சேர்க்கை விகிதம் குறைந்தது. அதிமுக ஆட்சியில் பள்ளி கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியியல் ரூ.1627 கோடி செலவு செய்யாமல் திருப்பி அனுப்பப்பட்டது என அண்ணா அறிவாலயத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.