நிரந்தர செயல் அலுவலரை நியமிக்க வலியுறுத்தியும்,அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரியும் பேரூராட்சி துணைத் தலைவர் பேருராட்சி அலுவலகத்தில் தர்ணா போரட்டம் நடத்திய சம்பவம் ஏர்வாடியில் அதிர்ச்சியை
ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திற்கு உட்பட்டது ஏர்வாடி.சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.இங்குள்ள பேரூராட்சி செயல் அலுவலர் பணியிடம் பல ஆண்டுகளாக காலியாக் இருப்பதாக கூறப்படுகிறது.எனவே மக்கள் நலப்பணிகளை மேற்கொள்வதில் சிரமம் நிலவுகிறது.இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலமுறை இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இன்று திடீரென பேரூராட்சி அலுவலகத்தின் வாயிலில் அமர்ந்து பேரூராட்சி துணைத்தலைவர் பீர் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரக்கோரி
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் பீர்விடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அவரிடம் உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.இதனால் தனது போராட்டத்தை பீர் கைவிட்டு சென்றார்.
வேந்தன்







