ஓ.பி.எஸ் தொடங்கிய நாடகத்திற்கு அவரே முற்றுப்புள்ளி வைப்பார் – நியூஸ் 7 தமிழுக்கு ஆர்.பி.உதயகுமார் பேட்டி

நியூஸ் 7 தமிழின் சூப்பர் டாக்ஸ் பகுதிக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஓபிஎஸ் தொடங்கிய நாடகத்திற்கு அவரே முற்றுப்புள்ளி வைப்பார் என தெரிவித்தார்.   நீயூஸ் 7 தமிழின் சூப்பர் டாக்ஸ்…

நியூஸ் 7 தமிழின் சூப்பர் டாக்ஸ் பகுதிக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஓபிஎஸ் தொடங்கிய நாடகத்திற்கு அவரே முற்றுப்புள்ளி வைப்பார் என தெரிவித்தார்.

 

நீயூஸ் 7 தமிழின் சூப்பர் டாக்ஸ் பகுதிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஓ.பி.எஸ் இடம் என்னென்ன உண்மை
இருக்கிறதோ அதை எல்லாம் சொல்லட்டும், அதிமுகவும், தொண்டர்களும் ஓபிஎஸ்-ஐ நிராகரித்து விட்டனர் என்றார்.

 

பொதுக்குழு முடிவு ஏகமனதாக எடுக்கப்பட முடிவு என்பது ஓ.பி.எஸ்-க்கு தெரியும். அதிமுகவில் ஓ.பி.எஸ்-க்கு என்ன ஆதரவு இருக்கிறது என அவருக்கு தெரியும் என்ற அவர், ஓ.பன்னீர்செல்வம் நடத்துவது முழுக்க முழுக்க நாடகம் என குற்றம்சாட்டினார். ஓ.பி.எஸ். தொடங்கிய நாடகத்திற்கு அவரே முற்றுப்புள்ளி வைப்பார் என்றும் தெரிவித்தார்.

ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். அவர் தற்போது அதிமுகவின் ஒழுங்கு நடவடிக்கையில் உள்ளார். சசிகலா, டி.டி.வி தினகரனை அழைத்ததின் மூலம் ஓ.பி.எஸ்-க்கு ஏற்பட்ட மாற்றம் குறித்து ஓ.பி.எஸ் மக்களிடம் விளக்க வேண்டும் என்றும் கூறினார். ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள அதிமுகவில் இருந்து யார் சென்றாலும் கட்சிக்கு எந்தவொரு பாதிப்புமில்லை.

 

அதிமுகவில் இருந்து ஒருவர் சென்றால் அதிமுகவுக்கு ஓராயிரம் பேர் வருவார்கள், அதிமுகவை எம்.ஜி.ஆர் தொடங்கியதன் நோக்கமே சாமானியர்கள் அதிகாரத்துக்கு வர வேண்டும் என்பது தான் என ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.