முக்கியச் செய்திகள் உலகம்

தைவானுக்கு ஆயுதம் விற்கும் அமெரிக்கா

சீன போர் விமானங்கள் தைவான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து வரும் நிலையில், தைவானுக்கு ஆயுத விற்பனை செய்ய, அமெரிக்க நாடாளுமன்றத்தில்  ஒப்புதல் கேட்க திட்டமிட்டுள்ளதாக அதிபர் ஜோ பைடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இவ்விவகாரத்தில் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்க இருந்து வருகிறது. சீனா – தைவான் இடையே பல காலமாக மோதல்கள் தொடர்ந்து வந்த நிலையில் அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் பயணம் அதை மேலும் தீவிரப்படுத்தியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சீனாவின் கடுமையான எச்சரிக்கையையும் மீறி நான்சி பெலோசி தைவானுக்கு சென்று திரும்பினார். தைவான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதை விரும்பாத சீனா, அந்நாட்டை ஒட்டியுள்ள கடற்பரப்பில் போர் பயிற்சி மேற்கொண்டது. இதுதொடர்பாக தைவானிடம் இருந்து சீனாவுக்கு வந்த புகாரை சீன அரசு நேற்று நிராகரித்தது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யவுள்ளார். 60 கப்பல் ஏவுகணை ஆயுதங்கள் மற்றும் 100 வான் ஏவுகணைகள் உள்பட 1.1 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை தைவானுக்கு விற்பனை செய்ய ஒப்புதல் அளிப்பதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற  கேட்க ஜோ பிடன் திட்டமிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திருமணமான பெண் இவ்வளவு தான் தங்கம் வைத்திருக்க வேண்டும் – அரசின் புதிய விதிகள் என்ன?

Web Editor

பென்னி குயிக் சிலை: சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம்..!

Web Editor

வெளியானது ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் புதிய பாடல்

EZHILARASAN D