முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள் விளையாட்டு

இங்கிலாந்து கிரிக்கெட்டின் புதிய படைத் தளபதி ஹாரி புரூக்

இங்கிலாந்து கிரிக்கெட்டின் புதிய படைத் தளபதியாக உருவெடுத்து வரும்  ஹாரி புரூக் பற்றி அலசுகிறது இந்த தொகுப்பு

டெஸ்ட் கிரிக்கெட்டுல ரொம்ப பெருசா பேசப்படுற விஷயம்னா அது bazz ball தான்! மெக்கல்லம் & ஸ்டோக்ஸ் கூட்டணியில கிரிக்கெட்டோட ஹோம்னு சொல்லப்படுற இங்கிலாந்து, இப்போ டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஒரு புது வழிய அறிமுகம் செஞ்சிருக்காங்க!

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

என்னமாதிரியான கேம் பிளானோட அவங்க உலகக்கோப்பையை வின் பண்ணாங்கலோ, அதையே தான் பென் ஸ்டோக்ஸ், அவர் தலைமையில அதிரடி காட்டிட்டு இருக்கிற இங்கிலிஷ் டெஸ்ட் டீம்க்கும் கொண்டு வந்துருக்காரு!

என்னதான் கேப்டன் பவர்புல்லான ஐடியா வச்சிருந்தாலும், அத எக்ஸிகியூட் பண்ணுற திறன், கேப்டனோட மன நிலைமைய புரிஞ்சி, பீல்டுல அத செயல்படுத்துறதுதான்… அப்படி அவருக்கு கிடைச்சிருக்க பெரிய பொக்கிஷம் தான் ”பிளடி ஸ்வீட்டான ஹாரி புரூக்”!

பதினேழு வருஷம் கழிச்சு பாகிஸ்தான் போன இங்கிலிஷ் சைடோட டீம்ல தனக்கான இடத்த பிடிச்சு, அதுக்கப்புறமா அவரு பண்ண ஸ்டிங் ஆப்ரேஷன் தான், இப்போ அவர பத்தி பெருசா பேச வச்சுச்சிட்டு இருக்குன்னு சொல்லனும்.

அதுக்கு அடித்தளமே பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர்ல அவர் அப்சர்வ் பண்ணிகிட்ட அனுபவம் தான்.. அந்த அனுபவத்தோட பாகிஸ்தான்ல, அவங்க ஹோம் சாயல்ல விளையாடின சீரிஸ்ல மட்டும், புரூக் 3 சதம் அடிச்சு தன்னோட திறன பதிவு செஞ்சிருக்காரு..

ஒரு காஞ்ச கிணறுல தண்ணி இல்லாத அந்த தாகத்த, போக்குற விதமா, பாகிஸ்தானோட விளைடாடின சீரிஸ்ஸ ஒயிட் வாஷ் பண்ணுனதுல பெரிய பங்கு புரூக்குக்கு உண்டு!

என்னதான் புரூக் இங்கிலாந்துல டெஸ்ட் டெப்யூ பண்ணி இருந்தாலும், அவரோட முதல் டெஸ்ட் சீரிஸ்னு நம்ம கணக்குல எடுக்கணும்ன அது பாகிஸ்தானோட விளையாடின சீரிஸ்தான். வாங்கின கேப்புல ஈரம் படாம விளையாடுவாருனு நினச்சிகிட்டு இருந்த பாகிஸ்தான் பவுளர்ஸ்சோட என்னத்த மொத்தமா சிதறடிச்சு, தன்னோட முதல் டெஸ்ட் தொடர்லயே தொடர் நாயகன் விருது வாங்கி இங்கிலாந்து கிரிக்கெட் உலகத்துக்கே, ஹெல்லோ ஜெண்டில்மேன், திஸ் இஸ் புரூக்னு தன்ன அறிமுகப்படுத்திகிட்டாரு 24 வயசான இந்த யங்ஸ்டர்!

இதனையும் படியுங்கள்: டிஎன்பிஎல் ஏலம் – அதிக தொகைக்கு தேர்வான டாப் 10 வீரர்கள் பட்டியல்

அடுத்து நியூசிலாந்து கண்டிஷன்ல பிங்க் பால bazzball எப்படி எதிர்க்கொள்ள போறாங்கன்னு ஆர்வம் அதிகமா இருந்துட்டு வந்த நிலையில, பாகிஸ்தானோட இருந்த பார்ம டிரஸ்ஸிங் ரூம்ல இருந்து சூட் கேஸ்ல எடுத்துகிட்டு போய், மொத்தமா கிவீஸ்ஸோட மண்ணுல 5.55 ரன்ரேட்ல ஆடி எக்ஸிகியூட் பண்ணினாங்க இங்கிலிஷ் சைடு.. அதுல முக்கிய பங்கு புரூக் உடையது !

81 பந்துல 89 ரன் அடிச்சு தான் எல்லா ஆடுகளத்துக்கும் ஏத்தவன்னு பேட்லயே பதில் சொன்னாரு! இரண்டாவது டெஸ்ட்ல க்ரீன் டாப் விக்கெட்டுல எப்படி பர்பார்ம் பண்ணப்போறார்ன்ற எதிர்பார்ப்பு எல்லார் மத்தியிலயும் எழுந்துச்சி..

இதனையும் படியுங்கள்: டிஎன்பிஎல் ஏலம்: அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் யார்? – முழு விவரம்

அப்போ 21/3 அப்படின்ற இக்கட்டான நிலைமையில உள்ள வந்து தன்னோட நேச்சுரல் கேம ஆடிட்டு இருந்த ரூட்-ன்ற அனுபவசாலி மேல இருந்த பிரஷெர மொத்தமா காம் பண்ணி, 176 பந்துகள்ல 186 ரன்கள அடிச்சு கிரங்கடிச்சாரு புரூக்… இந்த மேட்சில தான் டெஸ்ட் கிரிக்கெட்டுல அதிவேகமா 800 ரன்கள கடந்த பேட்ஸ்மேன் அப்படின்ற ரெக்கார்ட தன்னோட கேலரியில வச்சுக்க அவருக்கு தேவ பட்டது என்னவோ வெறும் 803 பந்துகள் மட்டும் தான்..

இது வரைக்கும் தான் அடிச்ச 7, 50+ ஸ்கோர்ல 5 தடவ 100+ ஸ்டரைக்ரேட் ஓட ஆடிருக்காரு இந்த யங்ஸ்டர்… பிரிட்டிஸோட கிரிக்கெட் யுத்தத்துல, ஸ்டோக்ஸ் அப்படிங்கிற அரசனுக்கு பேர்ஸ்டோங்கிற தளபதி, காயம் பட்டு வெளியே போனது என்னவோ பெரிய பலவீனமா இருந்திருக்கலாம்!

ஆனா, அதுக்கு பதிலா, ஹாரி புரூக்ங்கிற படைத் தளபதி ஒரு எக்ஸ் பேக்டரா கிடைச்சிருக்கிறது, தன்ன தூங்க விடாம சிந்திக்க வச்சிட்டு இருக்கிற அந்த அரசனோட இந்தியச் சுற்றுப்பயனத்துக்கு உதவுமா அப்படிங்கிறத நாம (கிரிக்கெட் உலகம்) பொறுத்திருந்து தான் பாக்கனும்!

நந்தா நாகராஜன், நியூஸ் 7 தமிழ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“சேப்பாக்கம் சென்று வேலையைப் பார்”: சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த உதயநிதி ஸ்டாலின்

Gayathri Venkatesan

முன்னாள் அதிமுக எம்எல்ஏ பாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலிசார் அதிரடி சோதனை

Jayasheeba

சென்னையில் 2-வது விமான நிலையம் – 17-ம் தேதி முடிவு

Web Editor