தமிழகத்தில் கடந்த அக்.6-ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. இதனைத்தொடர்ந்து இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. பின்னர் இவிஎம் இயந்தரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
தாராபுரத்தில் இதுவரை 14 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது.
1.தவெக (சத்தியபாமா) – 41,327
2.திமுக (சுகன்யா) – 33,263
3.அதிமுக (பானுமதி) – 27,561
4.நாதக (கார்த்திகா) – 3361
5.சிபிஐ ( லட்சுமணன்) – 734
தாராபுரத்தில் முதல் சில சுற்றுகளில் தவெக முன்னிலையில் இருந்த நிலையில், பிறகு அதிமுக முன்னிலைக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து அடுத்த சில சுற்றுகளிலேயே தவெக மீண்டும் முன்னிலை பெற்றது. தொடர்ந்து மூன்றாம் இடத்தில் இருந்து வந்த திமுக 11-வது சுற்றில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 14-வது சூற்றிலும் இரண்டாம் இடத்தில் தொடர்ந்து வருகிறது. தவெக வேட்பாளர் சத்தியபாமா 8064 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.




