மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘டிரெயின்’. இந்தப் படத்தில் சுருதி ஹாசன், கே.எஸ். ரவிக்குமார், கலையரசன், யுகி சேது, நரேன், நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இயக்குநர் மிஷ்கினே இசையமைத்துள்ளார். ‘டிரெயின்’ திரைப்படம், ஒரே இரவில் ரெயிலில் நடைபெறும் மர்ம சம்பவங்களை மையமாகக் கொண்ட டார்க் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. நீண்ட நாள்களாக வெளியாகாமல் இருந்த இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.
இதனிடையே ‘டிரெயின்’ படத்தின் முதல் பாடலான ‘கன்னக்குழிக்காரா’ வெளியானது. மிஸ்கின் இசையில் கபிலனின் வரிகளில் சுருதி ஹாசன் இப்பாடலை பாடியுள்ளார். ‘டிரெயின்’ படம் வரும் டிசம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், மிஸ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சுருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘டிரெயின்’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது..




