நாட்டின் 77-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்றது. அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் குடியரசு தினவிழாவையொட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய குடியரசு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு,
இந்திய அரசியலமைப்பு அளித்த சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உயரிய கோட்பாடுகளின் அடிப்படையில் நமது இந்திய மக்களாட்சி தொடர்ந்து வலுப்பெறும் வகையில் செயல்பட இந்த நன்னாளில் உறுதியேற்போம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







