77-வது குடியரசு தினம் – பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

குடியரசு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 77-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தலத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த குடியரசு தின வாழ்த்துகள்.

இந்தியாவின் பெருமை மற்றும் மகிமையின் அடையாளமான இந்த தேசிய விழா, உங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் புதிய ஆற்றலையும், உற்சாகத்தையும் கொடுக்கட்டும். வளர்ந்த இந்தியாவிற்கான உறுதிப்பாடு இன்னும் வலுப்பெறட்டும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.