நாட்டின் 77-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் குடியரசு தினவிழாவையொட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் குடியரசு தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியக் குடியரசு உருவாகக் காரணமான அனைவரையும் நினைவுகூர்ந்து போற்றுவோம். இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளான குடியரசு நாளில், அரசியலமைப்பின் மாண்பைக் காக்க உறுதியேற்போம். அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்”. இவ்வாறு அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது.







