77-வது குடியரசு தினம் : செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர்!

டெல்லி செங்கோட்டையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தேசியக் கொடியேற்றினார்.

இந்தியாவின் 77-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள தேசிய போா் நினைவிடத்தில், நாட்டுக்காகத் தம் இன்னுயிா்த் தியாகம் செய்த வீரா்களுக்குப் பிரதமா் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி, முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதனை தொடர்ந்து குடியரசுத் தலைவா் மாளிகையில் இருந்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, சிறப்பு விருந்தினா்கள் ஆகியோா் வீரா்கள் புடைசூழ கடமைப் பாதைக்கு வருகை தந்தவர்களை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.

தொடர்ந்து டெல்லி செங்கோட்டையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தேசியக் கொடியேற்றினார். கடமைப்பாதையில் 21 குண்டுகள் முழங்க குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது இந்திய விமானப்படையைச் சோ்ந்த நான்கு எம்ஐ-1வி ஹெலிகாப்டா்கள் தேசியக் கொடி மீதும், பாா்வையாளா்கள் மீதும் மலா்தூவியது. தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தலைமையில் அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினா்களாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வான் டொ் லெயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவா் அன்டோனியோ கோஸ்டா ஆகியோா் கலந்து கொண்டுள்ளனர். மேலும் ஐரோப்பிய யூனியனைச் சோ்ந்த ராணுவ வீரா்களும் அணிவகுப்பில் இடம்பெற்றுள்ளனர். மேலும், இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்டோ பலர் கலந்துகொண்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.