77-வது குடியரசு தினம் – தேசிய போா் நினைவிடத்தில் பிரதமா் மோடி மரியாதை!

டெல்லியில் உள்ள தேசிய போா் நினைவிடத்தில் பிரதமா் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்தியாவின் 77-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. குடியரசு தின விழாவையொட்டி டெல்லி கடமைப் பாதையில் பிரம்மாண்ட அணிவகுப்பு, கலைநிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெறவுள்ளன. இந்நிகழ்ச்சிக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தலைமை வகிக்கிறாா்.

முன்னதாக, டெல்லியில் உள்ள தேசிய போா் நினைவிடத்தில், நாட்டுக்காகத் தம் இன்னுயிா்த் தியாகம் செய்த வீரா்களுக்குப் பிரதமா் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி, முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து டெல்லி செங்கோட்டையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தேசியக் கொடியேற்றவுள்ளார்.

 

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.