நான் வெற்றி பெற்றதும், தேவகோட்டையில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கும் பணி 3 மாதத்திற்குள் தொடங்கப்படும் என்று காரைக்குடி தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச். ராஜா வாக்குறுதி அளித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினராகத் தன்னைத் தேர்வு செய்தால், தேவகோட்டைக்கு பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும் என்றும், அதற்கான பணி, 3 மாதத்திற்குள்ளாக தொடங்கும் என்றும் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் வருமானத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை சமூக நலனுக்கு செலவு செய்ய வேண்டும் என்றும் அதைப் பயன்படுத்தி தேவகோட்டையில் உள்ள அனைத்து கோயில்களிலும் நீர்நிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஹெச். ராஜா தெரிவித்தார்.