அரசியலை பெரும் லாபம் ஈட்டும் தொழிலாக மாற்றி விட்டார்கள்: சீமான்

சேவை என்பதை மறந்து அரசியலை பெரும் லாபம் ஈட்டும் தொழிலாக மாற்றி விட்டார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். சோழிங்கநல்லூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்…

சேவை என்பதை மறந்து அரசியலை பெரும் லாபம் ஈட்டும் தொழிலாக மாற்றி விட்டார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

சோழிங்கநல்லூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மைக்கேல் வின்சென்ட் சேவியரை ஆதரித்து, அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பள்ளிக்கரனை பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர் சேவை என்பதை மறந்து அரசியலை லாபம் ஈட்டும் பாதுகாப்பான தொழிலாக மாற்றி விட்டார்கள் என்றும், மக்களாட்சி என்பது வெறும் வார்த்தையாகவே உள்ளது என்றும் தெரிவித்தார்.

ஐம்பது ஆண்டாக, இரண்டே கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்கிறார்கள் என்றால் அது மாற்றமல்ல, ஏமாற்றம் என்று கூறிய சீமான், கல்வியை சந்தையாக மாற்றிவிட்டார்கள் என்றும் உயிரை காக்கும் மருத்துவத்தை வியாபாராமாக்கிவிட்டார்கள் என்றும் கூறினார். இது மாற்றத்திற்கான காலம் என்றும் இதை மாறுதலுக்கான அரசியலாகப் பார்த்து எங்களுக்கும் வாய்ப்பளியுங்கள் என்றும் சீமான் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.