மாதவிடாய் காலங்களில் பெண்களில் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சானிடரி நாப்கின்களை இலவசமாக வழங்க ஸ்காட்லாந்து அரசு முடிவெடுத்துள்ளது.
உலகில் பலபெண்கள் மாதவிடாய் கால பொருட்கள் முறையாக கிடைக்காமல் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதனிடையே மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு சானிடரி நாப்கின்கள் மலிவாக கிடைக்கும் வகையில் கடந்த 2018ம் ஆண்டு முதல் ஸ்காட்லாந்து அரசு பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பெண்களுக்கு இலவச நாப்கின், டாம்பன் அளித்து வந்தது. இந்நிலையில் மாதவிடாய் காலங்களில் பெண்களில் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் சானிடரி நாப்கின்களை இலவசமாக வழங்க ஸ்காட்லாந்து நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த சட்டத்தின்படி பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உள்ள பெண்களுக்கு மட்டுமின்றி வசதிபடைத்தவர்கள் தொடங்கி ஏழ்மையில் உள்ள அனைத்து பெண்களுக்கும் இலவசமாக மாதவிடாய் கால பொருட்கள் வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் உலகில் பெண்களுக்கு சானிடரி நாப்கின்களை இலவசமாக வழங்கும் முதல் நாடாக ஸ்காட்லாந்து மாறியுள்ளது.







