முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நாளை குரூப் 1 முதல் நிலைத் தேர்வு – 3.16 லட்சம் பேர் விண்ணப்பம்

குரூப் 1 முதல் நிலை தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், 92 காலி பணியிடங்களுக்கு 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி குரூப் 1 முதல் நிலை தேர்வு குறித்து அறிவித்திருந்தது. அதில், 18 துணை கலெக்டர்கள், 26 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 13 கூட்டுறவு சங்க துணை பதிவாளர்கள், 25 வணிகவரி உதவி ஆணையர்கள், 7 ஊரக மேம்பாடு உதவி இயக்குனர்கள், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் பதவிகள் என 92 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்திருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த பதவிகளுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்தவகையில் முதல்நிலைத் தேர்வு கடந்த மாதம் (அக்டோபர்) 30-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக அது தள்ளிவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்தது.

இந்த நிலையில் தள்ளிவைக்கப்பட்ட முதல்நிலைத் தேர்வு நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்நிலைத் தேர்வுக்கு 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விடுதிக்குள் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி

Arivazhagan Chinnasamy

மருத்துவக் கலந்தாய்வு: புதிய நடைமுறை அறிமுகம்

Web Editor

நடிகை விவகாரம்: முன்னாள் அமைச்சரை கைது செய்ய இடைக்கால தடை!

Halley Karthik