முக்கியச் செய்திகள் தமிழகம்

வரும் தேர்தலில் பாஜகவை சவாலுடன் எதிர்கொள்ள வேண்டும் -அமைச்சர் துரைமுருகன்

தமிழகத்தில் பாஜக பண பலம், அதிகார பலத்தால் வளர்ச்சியடைந்து வருகிறது. வரும் தேர்தலில் நாம் அவர்களிடம் சவாலுடன் எதிர்கொள்ள வேண்டும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார்.

வேலூர் மாவட்டம், லத்தேரியில் திமுகவின் பொது உறுப்பினர்கள் கூட்டம் வேலூர் மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி தலைமையில் நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கதிர் ஆனந்த்,ஜெகத் ரட்சகன்,தமிழக நீர்வளத்துறை துரைமுருகன் உள்ளிட்டோரும் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார், உள்ளிட்டோரும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் ஒரு பிசாசு மாதிரி பாஜக உருவெடுத்து வருகிறது பணம் அதிகாரம் பலத்தோடு அதனை நாம் முறியடிக்க வேண்டுமென்றால் நாம் வாக்குச்சாவடிக்குழுக்களை வலுவாக அமைக்க வேண்டும் என்றார்.

மேலும் அவர் பேசுகையில், எது எப்படி வந்தாலும் அதனை நாம் சந்திப்பதற்குத் தயாராக இருக்கிறோம் நாம் 40-க்கும் 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அப்போது தான் அதிகாரிகளும் பயப்படுவார்கள் மத்திய அரசும் பயப்படும் அதற்குப் பின் நம்மிடம் அவர்கள் பேசுவார்கள் இந்த முறை நாம் பெரிய பண திமிங்கிலத்தை எதிர்க்கப் போகிறோம் எனவும் அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பதட்டமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு – சங்கர் ஜிவால்

G SaravanaKumar

குரங்கு அம்மை குறித்த அச்சம் வேண்டாம்: மத்திய அரசு

Mohan Dass

என்எல்சியில் தமிழர்களை புறக்கணிப்பதா? மநீம கண்டனம்

G SaravanaKumar