முக்கியச் செய்திகள் சினிமா

கலகத்தலைவன் கார்ப்பரேட்களுக்கு எதிரான படமல்ல – இயக்குநர் மகிழ் திருமேனி

கலகத்தலைவன் கார்ப்பரேட்களுக்கு எதிரான கதையல்ல, கார்ப்பரேட் அத்துமீறல்களுக்கான கதை என அப்படத்தில் இயக்குநர் மகிழ் திருமேனி பேசியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள கலகத்தலைவன் திரைப்படம் இன்று வெளியான நிலையில், நேற்று நடிகர்களுக்குக்காணச் சிறப்புக் காட்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் திரையரங்கில் காட்சியளிக்கப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திரைப்படத்தைப் பார்ப்பதற்கு நடிகர் அருண் விஜய், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், பிக் பாஸ் ஆரவ் மனோ பாலா, கலையரசன் உள்ளிட்டோர் படம் பார்த்தனர்.

திரைப்படத்தைப் பார்த்த பின்பு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த நடிகர் அருண் விஜய், கதை கலமே மிக அழகாய் இருந்தது. ரசிகர்கள் இந்த படத்தைக் கண்டிப்பாக ரசிப்பார்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். படத்தின் பின்னணி இசை மிக அருமையாக உள்ளது. கலகத்தலைவன் படத்தில் கார்ப்பரேட் அரசியல் பத்தி பேசி உள்ளார்கள் என பேசினார்.பின்னர் பேட்டி அளித்த இயக்குநர் மகிழ் திருமேனி, தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி. படம் பேசும் கார்ப்பரேட்களுக்கு எதிரான கதையல்ல. கார்ப்பரேட் அத்துமீறல்களுக்கான கதை எனவும், கார்ப்பரேட் களுக்கு கூடுதல் சலுகைகள் அளிப்பது தவறு எனக் கூறும் கதை கார்ப்பரேட் களுக்கு கடிவாளம் போடக்கூடிய படம் என்றார்.

மேலும் பேசிய அவர்,  தமிழ்நாடு முதலமைச்சர் படம் பார்த்து, காலை 7.30 முதலமைச்சர் தொலைப்பேசியில் அழைத்து, ஒவ்வொரு காட்சியாகப் பாராட்டினார்.  கதைக்குள் போவார் என நினைக்கவில்லை. நான் என்ன சொல்ல நினைத்தேனோ அதை வைத்துள்ளேன்.  சென்சார் சில காட்சிகள் மட்டும்  கட் செய்தார்கள் எனவும் அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முன்னோடி கிராமமாக உருவெடுத்த அம்பேத்கர் நகர்….ஒரு இன்ஸ்பிரேஷன் ஸ்டோரி

Web Editor

அதிமுக முன்னாள் அமைச்சருக்கு எதிரான பண மோசடி வழக்கு: விரைந்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Web Editor

ஒரே நாளில் 11, 416 மெட்ரிக் டன் காய்கறிகள் விநியோகம்!

Halley Karthik