தமிழ்நாட்டில் ஆளுநரும் – முதலமைச்சரும் இணைந்து செயல்பட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் ஆளுநரும் – முதலமைச்சரும் இணைந்து செயல்பட வேண்டும்., ஈகோ பார்க்கக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கோயம்புத்தூர் சென்றுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அங்கு விமான நிலையத்தில் செய்தியாளர்களை…

தமிழ்நாட்டில் ஆளுநரும் – முதலமைச்சரும் இணைந்து செயல்பட வேண்டும்., ஈகோ பார்க்கக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கோயம்புத்தூர் சென்றுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அங்கு விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது;

கொங்கு மண்டலத்தில் நீர்பாசன திட்டங்கள் முழுமையடைய வேண்டும்.தமிழ்நாட்டில் நீர்பாசன திட்டங்கள் மற்றும் நீர் மேலாண்மைக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மிகப்பெரிய இயற்கை சீற்றங்களை சந்திக்க இருக்கிறோம். நீர்திட்டங்களை நிறைவேற்றி முழுமை படுத்த வேண்டும். இதில் அரசியல் இருக்க கூடாது.. நீர்பாசனம், நீர்மேலாண்மை, விவசாயம் ஆகியவை அரசியலில் இல்லாத ஒன்று. மேகதாது அணை தொடர்பாக கர்நாடகா முதலமைச்சர் அணையை கண்டிப்பாக கட்டுவோம் என கூறியிருப்பது கண்டிக்கத்தது.

அங்குள்ள மக்களை தூண்டிவிட்டு பிரச்சனையை உருவாக்கும் பேச்சாக நான் பார்க்கிறேன். 50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் நீர்மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. சொல்லப்போனால் இந்த 50 ஆண்டுகாலத்தில் திராவிட மாடலில் நீர்மேலாண்மைக்கு ஒன்றுமே செய்யவில்லை என்பதுதான் உண்மை. காவிரியில் தடுப்பணை கட்டினால் ஆங்காங்காங்கே நாம் 70 டி.எம்சி தண்ணீர் வரை தேக்கி வைக்கலாம். கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகட்டாத்ததற்கு காரணம் மணல் எடுக்க வேண்டுமாம். விலங்குகள் உள்ள பகுதியில் நாம் தான் உள்ளே நுழைகிறோம்.

தக்காளி மட்டும் இல்லாமல் மற்ற எல்லா காய்கறிகளின் விலையும் உயர்ந்துவிட்டது. இரண்டு மாதத்தற்கு முன்பு விவசாயிகள் தக்காளியை சாலைகளில் கொட்டினார்கள். எட்டு கோடி மக்கள் தொகையில் 150 அரசு கடைகள் போதுமா?. புதின கிடங்களுகள் அமைக்க வேண்டும்.

மதுவிற்பனை அதிகமாக உள்ள வடக்குபகுதியில் 65 டாஸ்மாக் கடைகள் தான் மூடபட்டுள்ளன. மதுவை திணிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். முத்துச்சாமிக்கு சமூக அக்கறை இருக்கிறது என நான் நினைக்கிறேன். சந்து கடை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். எங்கும் மது எதிலும் மது என்ற நிலை இருக்கிறது. செஞ்சி மஸ்தானை நானே கூட்டி கொண்டு போகிறேன். இல்லதரசிகளிடம் கேட்கலாம். சிறையில் மட்டுமல்ல தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கஞ்சா இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக வந்து இப்போது உச்சத்தில் இருக்கிறது. கஞ்சா கல்லூரி வாசல்களில் அதிகமாக விற்கப்படுகிறது. சிறையில் எல்லாம் கிடைக்கிறது.

டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டிருப்பது வேதனையளிக்கிறது. நேர்மையான நல்ல அதிகாரியை இழந்திருக்கிறோம். இது பொது மக்களின் விவாதமாக இருக்க கூடாது. கர்நாடக மாநிலத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றால் மேகதாது அணை குறித்து பேச வேண்டும். திமுக ஆட்சிவந்து இரண்டரை வருடங்கள் ஆகிறது..மாதமாதம் மின்கணக்கெடுப்பு நடத்ததபடும் என கூறினார்கள்.
நீட் தேர்வு ரத்து என்றார்கள். மகளிர் உரிமைத்தொகை அனைவருக்கும் என தேர்தலின் போது கூறினார்கள். கொடுத்தால் எல்லாருக்குமேதான் கொடுக்க வேண்டும். தெலுங்கானாவில் நீர் மேலாண்மைக்கு ஒன்றரை லட்சம் கோடி கடந்த ஏழு ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்துள்ளனர்

நடிகர் விஜய் சினிமாவில் நடிக்கிறார் எல்லோரும் ரசிப்போம் அவ்வளவு தான். செந்தில்பாலாஜி விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தபட வேண்டும். ஆளுநர் முதலமைச்சரும் இணைந்து செயல்பட வேண்டும். அப்போது தான் தமிழகத்திற்கு நல்லது. இதில் ஈகோ இருக்க கூடாது. நிச்சயமாக அரசியல் இருக்க கூடாது. ஆளுநர் என்பவர் திபதிகளை போல இருக்க வேண்டும். அந்த நிலைப்பாடை ஆளுநர் எடுக்க வேண்டும். நடுநிலையோடு செயல்பட வேண்டும். இங்குள்ள சுகாதாரத்துறை அமைச்சர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நாடாளுமன்ற பணிகள் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டோம். பாமக நிலைப்பாட்டை தேர்தல் நேரத்தில் நாங்கள் அறிவிப்போம். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.