முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா தமிழகம் செய்திகள்

நாடு திரும்பிய மாணவர்கள் உயர்கல்வி பயில அரசு நடவடிக்கை எடுக்கும்; அமைச்சர் பொன்முடி

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள், உயர்கல்வி பயில அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு செய்யும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த சில நாட்களாக போர் நடந்து வருகிறது. இதனால் அங்கு தங்கி பயிலும் இந்திய மாணவர்கள் உட்பட பல்வேறு நாட்டை சேர்ந்தவர்களும் உக்ரைனை விட்டு வெளியேறி வருகின்றனர். உக்ரைனில் இருந்து இதுவரை 15 லட்சத்திற்கும் மேலானவர்கள் வெளியேறியுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

உக்ரைனில் இருந்து இந்தியர்கள் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விமானங்கள் மூலமாக தாயகம் அழைத்துவரப்பட்டுள்ளனர். இதன் மூலமாக 1000க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

போர் காரணமாக பாதியிலேயே நாடு திரும்பிய மாணவர்கள் தங்களது படிப்பை உள்நாட்டிலேயே தொடர அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் அனைவரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும், மாணவர்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் இது தொடர்பாக, இன்று காலை 10 மணி முதல் நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு நடத்தி வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தேசிய கல்விக் கொள்கைக்கு பதில் மாநில கல்விக் கொள்கையை உருவாக்க புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது. என்று பேசினார். தொடர்ந்து பேசிய அவர், உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள், உயர்கல்வி பயில தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆண்டிராய்ட் மொபைல் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!

G SaravanaKumar

ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் பிரதிநிதித்துவத்தை வளரும் நாடுகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் – இந்திய பிரதிநிதி வலியுறுத்தல்

G SaravanaKumar

மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

EZHILARASAN D