சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இறந்த நபரின் சடலத்தை மீட்டு, அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த பெண் காவலரின் உதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்களுக்கு பெண்கள் நிகரென அனைத்து துறையிலும் நிரூபித்து வரும் நிலையில், மாநகராட்சி மேயர் பதவிகளும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு பெண்கள் மேயர்களஆக பதவியேற்றுள்ளனர். காவல்துறையிலும் பெண் காவல் அதிகாரிகளும், பெண் காவலர்களும் அசத்தி வருகின்றனர். ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பெண் காவலர்கள் நீதிமன்ற வழக்கு பணிகளுக்கு நியமிக்கபட்டு, அக்காவல் நிலையத்தின். நிலுவையிலுள்ள வழக்குகளை உத்வேகத்துடன் சிறப்பு கவனம் செலுத்தி, சாட்சிகளை சம்மன் கொடுத்து ஆஜர்படுத்துவதலும் ஆர்வம் காட்டி அநேக வரக்குகளில் விரைவில் தீர்ப்பு வழங்கிட அயராது உழைக்கின்றனர்.

இதற்கு சமீபத்திய தீர்ப்புகள் சான்றுரைக்கும். சட்டம் ஒழுங்கு பணியிலும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என இரவு பணியிலும் அயராது ரோந்து பணிகள் மேற்கொண்டு வீர மங்கைகளாக வலம் வருகின்றனர். இரவு பணியிலும் பெண் காவலர்கள் விவேகமாக பணி செய்து வருகின்றனர் என்பதற்கு சான்றாக நேற்று இரவு மூர் மார்க்கெட், அல்லிக்குளம் அருகில் புறநகர் இரயில் நிலைய நுழைவு வாயில் அருகில் ஒரு நபர் மயங்கி கிடப்பதாக காவல் கட்டுப்பாட்டறைக்குவந்த தகவல் கொண்டு பெரியமேடு ரோந்து வாகன போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தபோது அந்த நபர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
விசாரணையில் அந்த நபர் அவரது சித்தியுடன் இரயில் ரயில் நிலையத்துக்கு நடந்து வரும்போது வலிப்பு வந்து மயங்கி விழுந்து இறந்தது தெரியவந்தது. அவரை தூக்குவதற்கு கூட யாரும் முன் வராத நிலையில் ரோந்து வாகன பொறுப்பு பெண் காவலர் அந்த நபரை தூக்கி வாகனத்தில் ஏற்றி அந்த பெண்மணிக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார். எவ்வளவோ தடைகளை தகர்த்தெறிந்து காவல் பணியையும் குடும்பத்தையும் சமாளித்து அயராது பாடுபடும் பெண் காவலர்களுக்கும் இரவு பணியில் இறந்த நபரை தூக்கி வாகனத்தில் ஏற்றி அனுப்பிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







