அரியலூர் அருகே குப்பைமேட்டில் கிடந்த அரசுப் பேருந்து பயண சீட்டுகளால் பரபரப்பு நிலவியது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் இயக்கப்படும் பேருந்துகளில்,
இயந்திரத்தின் மூலம் பயண சீட்டுகள் வழங்கப்பட்டாலும் 40% பேருந்துகளில்
டிக்கெட் கிழித்தே வழங்கப்படுகிறது. இந்நிலையில், அரியலூர் மாவட்டம்
ஜெயங்கொண்டத்தில் உள்ள விசாலாட்சி நகரில் , அரசு பேருந்து பயண சீட்டு
ஒரே இடத்தில் குவிந்து கிடப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புகார்
தெரிவித்தனர்.
மேலும், சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது சேலம் மற்றும் கும்பகோணம்
கோட்டத்திற்குட்பட்ட பேருந்து பயண சீட்டுகள் ஒரே இடத்தில் கிடந்தன.
220 ரூபாய் பயண சீட்டிலிருந்து ஒரு ரூபாய் பயண சீட்டு வரை 300-க்கும் மேற்பட்ட
பயண சீட்டுகள் குப்பைமேட்டில் கிடந்தன.
இவை போலி டிக்கெட்டுகளாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
—கு.பாலமுருகன்







