20 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற ஜல்லிக்கட்டு: பொதுமக்கள் மகிழ்ச்சி!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அ.புதுப்பட்டி கிராமத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அ. புதுப்பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பாலமரத்தம்மன், சுந்தரவல்லி அம்மன்…

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அ.புதுப்பட்டி கிராமத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அ. புதுப்பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பாலமரத்தம்மன், சுந்தரவல்லி அம்மன் கோவில் உற்சவ விழாவை முன்னிட்டு
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த திட்டமிடப்பட்டது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பின் தமிழக அரசின் அனுமதி பெற்று மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின் படி பாதுகாப்புடன் நடைபெற்றது.

ஜல்லிகட்டில் பங்கேற்கும் காளைகளுக்கும், வீர்ர்களுக்கும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக ஆன்லைனில் முன்பதிவு தொடங்கிய நிலையில் தேர்வு செய்யப்பட்ட சுமார் 400 மாடு பிடி வீரர்களும் 900 காளைகளும் மருத்துவ பரிசோதனைக்கு பின்  அனுமதிக்கப்பட்டன.

ஜல்லிகட்டில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும் காளையின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், பீரோ, மிக்ஸி, பேன்,கிரைண்டர் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருள்கள் வழங்கப்பட்டன.

ஜல்லிகட்டை காண மதுரை, திண்டுக்கல் தேனி, மதுரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியிலிருந்து பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க சமயநல்லூர் காவல் துறை கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.