குன்னூர் வெலிங்டன் அருகே உணவு இரவில் ஊருக்குள் வநத் கரடியால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. இதற்கிடையே உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரத்தில் கரடிகள் உலா வருவதால் பொது மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் குன்னூர் வெலிங்டன் பகுதியில் இரவு நேரத்தில் உணவு தேடி கரடி ஒன்று கடையின் கதவை திறக்க முயன்றதால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கரடி அங்கிருந்து வேறு பகுதி சென்றது. இதற்கிடையே அப்பகுதியில் இருந்த குடியிருப்புவாசிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். வனத்துறையினர் விரைந்து அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடவேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
—கோ சிவசங்கரன்







