முக்கியச் செய்திகள் இந்தியா

அரசின் சின்னங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தேசிய மற்றும் மாநில அரசின் சின்னங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மறைந்த முன்னாள் எம்.பி. அன்பரசு தேசிய சின்னங்கள் மற்றும் அடையாளங்களை தவறாக பயன்படுத்தியதாக, ககன் சந்த் போத்ரா என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், பதவிக்காலம் முடிந்த அமைச்சர்கள், எம்.பிக்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் அரசின் கடைநிலை ஊழியர்களும் பயன்படுத்துவதாக தெரிவித்தார்.

அனைவரும் பயன்படுத்தினால் சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் எப்படி அந்த வாகனத்தை நிறுத்தவோ, விசாரிக்கவோ செய்வார்கள் என கேள்வி எழுப்பிய அவர், தேசிய மற்றும் மாநில அரசின் சின்னங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை, தடுக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

மேலும், இரண்டாம் நிலை காவலர் கூட நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளை எவ்வாறு, அமல்படுத்தலாம் என்பதற்கான ஆலோசனைகளை வழங்க, தமிழ்நாடு டிஜிபிக்கும், சென்னை மாநகர காவல் ஆணையருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

கர்ப்பத்தை கலைக்குமாறு தகராறு செய்த கணவன்: கத்தியால் குத்திக் கொலை செய்த மனைவி

Arivazhagan CM

அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றதை கொண்டாடிய பூர்வீக கிராம மக்கள்!

Jeba Arul Robinson

ஆண்டாள், ஔவையார் லட்சியத்தால் உத்வேகம் பெற்றுள்ளோம்: பிரதமர் மோடி

எல்.ரேணுகாதேவி