திருநெல்வேலியில் காவலர் தூக்கிட்டு உயிரிழப்பு

திருநெல்வேலி மாநகர காவலர் குடியிருப்பில், முதல்நிலை காவலர் ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாநகர காவல்துறையின் ஆயுதப்படை வாகன பிரிவில் முதல் நிலை காவலராக குமரேசன் என்பவர்…

திருநெல்வேலி மாநகர காவலர் குடியிருப்பில், முதல்நிலை காவலர் ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாநகர காவல்துறையின் ஆயுதப்படை வாகன பிரிவில் முதல் நிலை காவலராக குமரேசன் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர், பாளையங்கோட்டையில் உள்ள மாநகர காவல்துறை காவலர் குடியிருப்பில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், பணி முடிந்து இரவு வீட்டிற்கு வந்த குமரேசன், ஓய்வு எடுப்பதாகக் கூறி, தனி அறைக்குச் சென்றுள்ளார்.

வெகுநேரமாக அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த மனைவி, உள்ளே சென்று பார்த்தபோது, அவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருமாள்புரம் காவல்நிலைய போலீசார், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.