முக்கியச் செய்திகள் தமிழகம்

பாலியல் புகாரின் விசாரணையை தாமதப்படுத்துவது கடமை தவறிய செயல் – சென்னை உயர் நீதிமன்றம்

பெண்களுக்கு எதிரான பாலியல் புகார் வழக்குகளின் விசாரணையை தாமதப்படுத்துவது கடமை தவறிய செயல் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கல்பாக்கம் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவருக்கு, ஆண் ஊழியர் கடந்த 2013-ஆம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் குறித்து விசாக குழு விசாரணை மேற்கொண்டது.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக விசாகா குழு அறிக்கை தாக்கல் செய்த நிலையில், அதை கலைத்துவிட்டு புதிய குழு அமைத்ததை எதிர்த்து பெண் ஊழியர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.

பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் மீதான விசாரணை தாமதப்படுத்துவது என்பது கடமை தவறிய செயல் என கருத்து தெரிவித்த நீதிபதி, இத்தகைய செயல்களை குற்றமாகவும் கருதப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரசு துறைகள் மற்றும் பொது நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் சமீப காலங்களில் அதிகரித்து வருவதாகவும் நீதிபதி வேதனை தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

புரட்டிப் போட்ட இடா புயல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆக உயர்வு

Gayathri Venkatesan

மருத்துவர் லி வென்லியாங்கை நினைவுகூரும் வூஹான் மக்கள்!

Jayapriya

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ராஜினாமா!

Halley Karthik