மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னையில் கேமராக்கள் மூலம் பதிவான போக்குவரத்து விதி மீறல் வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதனை புறநகர் பகுதிகளில் டிசம்பர் 5 ஆம் தேதி 40 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது.இதனால், சென்னை முழுவதும் மழை நீர் தேங்கி உள்ளது.
அதனை தொடர்ந்து, சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டிசம்பர் 3 ஆம் தேதி முதல் டிசம்பர் 8 ஆம் தேதி வரை, வெவ்வேறு சந்திப்புகளில் நிறுவப்பட்ட ANPR கேமராக்கள் மூலம் மொத்தம் 6,670 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கடந்த 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை கேமராக்களில் போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பாக பதிவான 6,670 வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.







