புதிய கல்வி அமைச்சராக பொறுப்பேற்றார் பிரகலாத் ஜோஷி!

புதிய கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்ட பிரகலாத் ஜோஷி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு பொருப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லியில் போராட்டம் நடத்தியதை அடுத்து கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நெற்று ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் கர்நாடகாவின் முன்னாள் பாஜக மாநில தலைவரும், இந்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சருமான பிரகலாத் ஜோஷி கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் பிரகலாத் ஜோஷி இன்று புதிதாக கல்வி அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதுகுறித்து அமைச்சர் பிரகலாத் ஜோஷி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “இன்று நான் மத்திய கல்வி மந்திரியாக பொறுப்பேற்றேன். என் மீது நம்பிக்கை வைத்து, இந்தப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்த பிரதமர் மோடிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பணிவுடனும், ஆழ்ந்த கடமை உணர்வுடனும் இப்பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.