“மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து அமித்ஷா பதிலளிக்க வேண்டும்!” – கே.சி.வேணுகோபால்

மணவர்கள் மீதான தாக்குதலுக்கு அமித்ஷா பதிலளிக்காமல் அவரை நாடாளுமன்றத்திற்குள் அனுமதிக்க மாட்டோம் என்று கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேனுகோபால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது “நீநாட்டின் மாணவர்களும் இளைஞர்களும் மத்திய அரசுக்குத் தெளிவான எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இளைஞர்கள் தேசத்திற்குத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

மாணவர்களுக்கு எதிராகக் காவல் துறையைக் கொண்டு தடியடி நடத்த உத்தரவிட்டது யார்? பெண் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டது யார்? இந்தச் சம்பவங்களுக்கு யார் பொறுப்பு? நாளைய தினம் நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இதற்குப் பதிலளிக்க வேண்டும். இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதிலளிக்காமல் அமித்ஷாவை நாடாளுமன்றத்தில் அனுமதிக்க மாட்டோம் நீட் தேர்வு தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராடி அமைச்சரை பதவி விலக வைத்தனர் அதற்க்கு ஒரு பெரிய சல்யூட்.

எங்கள் தலைவர் ராகுல் காந்தி பிரதமருக்கும் அரசுக்கும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். நீட் தேர்வில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளுக்கு முழுப் பொறுப்பேற்று, தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மாணவர்களின் மற்றும் நாட்டின் கோரிக்கையாகும். மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறும் வரை காங்கிரஸ் கட்சி அவர்களுக்குத் துணையாக நிற்கும்.

மத்திய அரசின் நடவடிக்கைகளைக் காங்கிரஸ் கட்சி ஒரு காவலனைப் போலக் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுப்பது காங்கிரஸ் கட்சியும் எங்கள் தலைவர் ராகுல் காந்தியும் தான். நீட் தேர்வு முறைகேடுகள் சரிசெய்யப்படவில்லை என்றால் தொடர்ந்து போராட்டம் வெடிக்கும். வருகிற ஆகஸ்ட் 1-ஆம் தேதி மகாபலிபுரத்தில் நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் பயிற்சி முகாமில் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொள்ள உள்ளார். நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பலப்படுத்தப்பட்டு வருகிறது” என்று அவர் கூறினார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.