தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதன்படி, வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்து காணப்பட்டது. அதன்படி, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.13,950-க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.1,11,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தின் விலை குறைந்த நிலையில் வெள்ளி விலை மாற்றமின்றி காணப்பட்டது. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.14,250-க்கும், சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ரூ.1,14,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தைப் போன்று வெள்ளி விலையும் உயர்ந்து காணப்படுகிறது. சென்னையில் வெள்ளி 1 கிராம் ரூ.10 உயர்ந்து ரூ.260-க்கும், 1 கிலோ ரூ.10,000 உயர்ந்து ரூ.2.60 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.




