சட்டப்பேரவையில் ஒபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் இடையே காரசார விவாதம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஓ.பி.எஸ் மற்றும் செங்கோடையன் இடையே காரசாரமாக விவாதம் நடைபெற்றது.

2026-27-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொதுபட்ஜெட் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆகஸ்ட் 6-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யப்படது.

இந்த நிலையில் பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. மூன்றாவது நாள் விவாதம் இன்று காலை 9:30 மணிக்கு தொடங்கியது. அப்போது முதலில் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், “தவெக அரசு பெயர் மாற்றம் செய்து புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த பட்ஜெட் ஏமாற்றத்தின் வழிகாட்டியாக உள்ளது. தவெக அரசு வாக்குறுதி அளித்தபடி மகளிர் உரிமைத் தொகை உயரவில்லை. இதனால் மகளிர் அனைவரும் ஏமாந்து நிற்கிறார்கள். ஆண்டுக்கு ஆறு கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் பட்ஜெட்டில் வரவில்லை. திரும்பும் பக்கமெல்லாம் திமுகவின் சாதனைகள் தான் ஜொலித்துக் கொண்டிருக்கிறது. முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்கள் தான் புதுமை பெற்றுள்ளது. இந்த அரசின் புதிய திட்டங்களை தேடுகிறேன் தேடுகிறேன் தேடிக்கொண்டே இருக்கிறேன்.” இவ்வாறு பேசினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “5 ஆண்டுகளுக்குள் சொன்னவற்றை நிறைவேற்றுவோம், ஓ.பன்னீர்செல்வம் சொல்வதை போல் 3 மாதத்தில் செய்து சரித்திரம் படைக்க முடியாது. நீங்கள் இடம் மாறி இருக்குறீர்கள் பரவாயில்லை. அதற்காக இவ்வளவு துதி பாட வேண்டிய அவசியமில்லை.

இதற்கு பதிலளித்த ஓ.பி.எஸ், “முதலில் அணி மாரியது செங்கோட்டையன் தான் என்றார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “இடத்தை முதலில் மாற்றி இருந்தாலும் அவர் சட்டையில் உள்ள அம்மாவின் நிழல் இடத்தை இன்னும் மாற்றவில்லை அதுதான் எங்களுடைய முதலமைச்சர். ஆனால் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் இடம் அவருடைய மனமும் மாறி உள்ளது பாக்கிட்டில் உள்ள புகைப்படமும் மாறி உள்ளது” என்றார்.

இதனிடையே குறுக்கிட்ட சபாநாயகர் “இருவரும் கருத்துக்களை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ள வேண்டும்” என விவாதத்தை முடித்து வைத்தார்.

தொடர்ந்து பேசிய ஒபிஎஸ், “பயிர் கடன் தள்ளுபடி சொன்னது போல் செய்யாமல் இந்த அரசு ஏமாற்றி உள்ளது. விவசாயிகள் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கின்றனர். காவலர்களுக்கு போதுமானஊதியம் இல்லாமல் ஏமாந்து நிர்கிறார்கள். ஒரு அரசு கடன் வாங்காமல் இருக்க முடியாது, அதனால் எத்தனை திட்டங்கள் பயன்பெற்றுள்ளது என்பதை தான் நாம் பார்க்க வேண்டும். கடன் வாங்கி விட்டார் என முன்னாள் முதல்வரை குற்றம் சாட்ட கூடாது. மாநிலத்தின் சொந்த வருவாய் குறைந்துள்ளது. கரும்பு மற்றும் நெல் கொள்முதல் விலையில் விவசாயிகள் ஏமாற்றம் அடந்துள்ளார்கள். இந்த பட்ஜெட் என்பது வேதனை அளிக்கிறது.” இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.