சர்வதேச பொருளாதார சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.130-ம், சவரனுக்கு ரூ.1,040-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ. 14,100-க்கும் ஒரு சவரன் ரூ.1,12,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்றும் தங்கம் விலை குறைந்தது. அதன் படி இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ. 13,950-க்கும், ஒரு சவரன் ரூ.1,11,600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கும், கிலோ ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் தற்போது தங்கம் விலை மாலையில் மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி, தங்கம் விலை தற்போது கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,900க்கு விற்பனையாகிறது. மேலும் சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,11,200க்கு விற்பனையாகிறது.







