தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி!

வி.எஸ். பாபுவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் வி. எஸ். பாபு நீண்டகால சுவாசப் பாதிப்பு காரணமாக, 2026-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதியன்று எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். முறையான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் எங்களது பல்நோக்கு மருத்துவக் குழுவினரின் தீவிர முயற்சிகள் இருந்தபோதிலும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது.

தொடர்ந்து, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் விளைவாக, இன்று பிற்பகல் 2:24 மணிக்கு அவர் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வந்தனர். அவரது உடல் பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வி.எஸ். பாபுவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். பெரம்பூர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள வி.எஸ்.பாபுவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் விஜய், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.