திடக்கழிவு மேலாண்மை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில், நீதிபதிகள் எஸ்.வி.என். பட்டி மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து மாநிலங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் அமல்படுத்தப்படுவது தொடர்பாக கண்காணிக்க உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு சமர்பித்த நிலை அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், பிரச்சனையை தீர்க்க உரிய நடவடிக்கைகள் எடுக்காததற்கு அதிருப்தி தெரிவித்தனர்.
மோசமான சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மைப் பிரச்சினையைத் தீர்க்க தவறியதால், நாடு மற்ற துறைகளில் அடைந்த பொருளாதார வளர்ச்சி பயனற்றுப் போவதகாகவும், குறிப்பாக, இந்தியா தற்போது ஒரு செல்வந்த நாடாக முன்னேறி இருந்தாலும், சுகாதாரத்தில் மோசமான நிலை பிற துறைகளில் அடைந்த வளர்ச்சியை பயன்று போக செய்வதாக கவலை தெரிவித்தனர்.
மேலும், மோசமான சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை நாட்டின் எதிர்காலத்தைப் பாதிப்பதாக கூறிய நீதிபதிகள், திடக்கழிவு மேலாண்மை விதிகள் செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்கவும், கழிவு மேலாண்மை நிலையங்களின் செயல்பாடு, கள நிலவரங்களை மதிப்பிடவும், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் ஆய்வுகளைப் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
அதுபோல, நிதி நெருக்கடிகளைக் காரணம் காட்டி, பொது சுகாதாரம் மற்றும் தூய்மையைப் பேணும் தங்கள் கடமையிலிருந்து நகராட்சிகள் தப்பிக்க முடியாது என்றும், உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவு மேலாண்மை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு பெருநிறுவன சமூகப் பொறுப்பு பங்களிப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2027 ஜனவரி 12ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.




