‘மேயாத மான்’,‘ஆடை’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ரத்னகுமார். இவர் தற்போது 29 என்கிற புதிய படத்தை இயக்கியுள்ளார். கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் மற்றும் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மேலும் இப்படத்தில் மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ் மற்றும் பிரேம் குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசைமைக்கும் இப்படம் வரும் மே 8 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில் இன்று 29 படக்குழுவின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ் கூறியதாவது: சினிமாவில் எனக்கு இன்ஸ்பிரஷன் கமல்ஹாசன் தான். சினிமாவில் சம்பாதிப்பதை சினிமாவுக்கே கொடுக்க வேண்டும் என கற்றுக் கொடுத்தது அவர் தான். நான் இந்த படத்தை தயாரிக்கிறேன். அடுத்தும் பல திறமைசாலிகளுக்கு வாய்ப்பு அளிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.




