நிகழாண்டின் தொடக்கம் முதலே தங்கம் மற்றும் வெள்ளி விலை உச்சம் தொட்டு வருகிறது. கடந்த 1-ந்தேதி கிராம் ரூ.14,900, சவரன் ரூ.1,19,200 ஆகவும் விற்பனை ஆனது. அதன் பின்னர், தங்கம் சற்று ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வந்தது.
இந்த சூழலில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. அதன் படி தங்கம் விலையானது நேற்று, கிராமுக்கு ரூ.120-ம், சவரனுக்கு ரூ.960-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ. 14,320-க்கும், சவரன் ரூ.1,14,5600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் நேற்று மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கும், ஒரு கிலோ ரூ.2,65,000-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி சென்னையில், ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,230க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல சவரனுக்கு ரூ.720 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போல வெள்ளியும் கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ ரூ.2,60,000-க்கும் விற்பனையாகி வருகிறது.







